Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

கொவிட்19 வேகமாக பரவலாம் - சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

சமூகத்தில் உலாவருகின்றவர்களிடம், கொரோனா வைரஸ் இருந்தும் அதன் அறிகுறிகள் தென்படாதவர்களிடம் இருந்து, ஏனையவர்களுக்கு தொற்று பரவும் ஆபத்து நாட்டில் இருக்கின்றது ,என்ற எச்சரிக்கை ,இன்று செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளர்களில், 50 வீதமானவர்களுக்கு இந்தத் தொற்றின் அறிகுறிகளே காணப்பட்டிருக்கவில்லை என்று, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கூறி உள்ளார்.
இதன் காரணமாக சமூக இடைவெளி மற்றும் சுகாதார ஏற்பாடுகளை மக்கள் நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

No comments