திருகோணமலை-பதவிசிறிபுர பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானொருவர் இனங்காணப்பட்டுள்ளதாக பதவிசிறிபுர சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு இணங்காணப்பட்டவர் பதவிசிறிபுர - 10 கொலனியைச் சேர்ந்த 28 வயதுடைய கடற்படை சிப்பாய் எனவும் தெரியவருகின்றது.
வெலிசற பகுதியில் கடமையாற்றி வந்தவர் எனவும் இவரது மாதிரிகள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பரிசோதனை செய்யப்பட்டிருந்த நிலையில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பதவிசிறிபுர சுகாதார வைத்திய அதிகாரி எரங்க குறுசிங்க தெரிவித்தார்.
அத்துடன் இந்நோயாளியுடன் தொடர்புடைய மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை திருகோணமலை பிராந்திய தொற்று நோயியல் வைத்திய அதிகாரி டொக்டர் டி. நிலோஜனை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments