Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

திருகோணமலை நீதிமன்றத்தினால் வழக்குகளுக்கான திகதிகள் அறிவிப்பு

(அப்துல்சலாம் யாசீம்)



நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து அரசினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்ட சூழ்நிலை காரணமாக திருகோணமலை முதலாம் இலக்க  நீதிமன்றத்தினால் 2020.03.16ம் திகதியிலிருந்து 24.04.2020ம் திகதி வரை நியமிக்கப்பட்ட வழக்குகள் யாவும் கீழ் வரும் திகதிகளில் குறிப்பிடப்படும் என திருகோணமலை  நீதிமன்றத்தின் பிரதம நீதவான் பெருமாள் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

 திருகோணமலை நீதிமன்றத்தினால்  இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

 இதனடிப்படையில் 2020 மார்ச் மாதம் 16ஆம் திகதி  திகழி இடப்பட்ட வழக்குகள்  எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ளது. 

அதேபோன்று மற்றைய திகதிகளும் நீதிமன்ற விளம்பரப்பலகையில்   காட்சிப்படுத்தப்பட்டுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


No comments