Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உட்பட 4 ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் தெரிவு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உட்பட 4 ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் தெரிவு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, அரச சேவைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள்ஆ ணைக்குழு ஆகியவற்றிற்கான உறுப்பினர்கள் இன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல குறிப்பிட்டுள்ளார்.


அரசியலமைப்பு பேரவை இன்று (09) கூடியபோது இந்த சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.


இந்த பெயர் விபரங்களை இன்றைய தினத்திற்குள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் கூறியுள்ளார்.

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு தகுதியான உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான பொறுப்பு அரசியலமைப்பு பேரவைக்கு வழங்கப்பட்டிருந்தது.

அடுத்த மாதம் 4 ஆம் திகதி அரசியலமைப்பு பேரவை மீண்டும் கூடவுள்ளது.

No comments